ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு


ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
x

ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவர் ஒக்கூர் அண்ணா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் ஆசிரியர் முருகன் தன்னுடைய வீட்டின் வாசலில் நின்று ெசல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியர் முருகன் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story