சங்கராபுரம் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு


சங்கராபுரம் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:55 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருடு போனது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். தொழிலாளி. இவரது மனைவி உத்திரம்பாள். மகன் நந்தகுமார். இவர்கள் அனைவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக, ஈரோட்டிற்கு சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் மாலை இவர்கள் திரும்பி வந்தனர். அப்போது, வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை திருடு போயிருந்தது.

நாராயணனின் வீடு கூரை வீடாகும். இதில் கூரைக்கும், மண் சுவருக்கும் இடையே சிறிது இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி, மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று, நகையை திருடி சென்றுவிட்டனர்.,

இதுகுறித்து நந்தகுமார் சங்கராபுரம் போலீசில் நந்தகுமார் தந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து நடத்தி வருகிறார்.


Next Story