சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு
x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 22-ம் தேதி முதல் தங்கம் விலை சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று தங்கத்தின் விலை பவுன் ரூ.440 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை சவரனுக்கு 136 அதிகரித்து அதிகரித்து ரூ.37,576க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.61.50ஆகவும், கிலோ ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் விற்கப்படுகிறது


Next Story