சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது


சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது
x

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,940 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.4,960 ஆக உயர்ந்து உள்ளது.

கிராமுக்கு ரூ.20 உயர்ந்து உள்ளது. நேற்று தங்கம் பவுன் ரூ.39,520-க்கு விற்பனை ஆனது. இன்று இது பவுன் ரூ.160 அதிகரித்து ரூ.39,680 ஆக விற்பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது.

கிராம் ரூ.68.50-ல் இருந்து ரூ.67.50 ஆகவும் கிலோ ரூ.68.500-ல் இருந்து ரூ.67,500 ஆகவும் குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Related Tags :
Next Story