பொள்ளாச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
பொள்ளாச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பழனியப்பா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் குடும்பத்துடன் நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பீரோவில் இருந்த 8.5 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்திருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பொள்ளாச்சியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.