நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
ராமநாதபுரத்தில் ரெயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் மதுரையார் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் பாஸ்கரன் (வயது 45). இவர் ராமநாதபுரம் நகைக்கடை பஜாரில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் நேற்று பிற்பகலில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது நடைமேடையில் நின்று செல்போன் பேசிக்கொண்டு இருந்த பாஸ்கரன் திடீரென்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே பலியான பாஸ்கரனை பார்த்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பாஸ்கரனுக்கு நித்யா என்ற மனைவியும் சவுந்தர்யா, அபிராமி ஆகிய 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.