போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளரிடம் நகை பறிப்பு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளரிடம் நகை பறிப்பு
x

பாளையங்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளரிடம் நகை பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கண்காணிப்பாளரிடம் நகை பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகை பறிப்பு

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காசிராஜன் மனைவி தேவிகா (வயது 50). இவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவில் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தேவிகா அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

போலீசார் விரைந்தனர்

இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இந்த நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.Next Story
  • chat