வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு


வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
x

வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பழைய சீவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி வரலட்சுமி (வயது 35). வரதாபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வாலாஜாபாத்தில் நடந்த சத்துணவு பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேரு நகர் பகுதி வழியாக நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நோட்டமிட்டபடி வந்த 2 மர்ம நபர்கள் திடீரென வரலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

இது குறித்து வரலட்சுமி வாலாஜாபாத் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்று வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story