ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு
x
தர்மபுரி

தர்மபுரி அருகே எர்ரப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எர்ரப்பட்டியில் இருந்து பஸ்சில் ஏறி தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்தார். பஸ்சில் இருந்து இறங்கிய போது தனது கையில் வைத்திருந்த பையை பார்த்தார். அப்போது பைக்குள் வைக்கப்பட்டு இருந்த அவருடைய பணப்பை மாயமாகி இருந்தது. அதற்குள் 15 பவுன் நகைகளை அவர் வைத்திருந்ததாக தெரிகிறது. பஸ்சில் இவர் வரும்போது நோட்டமிட்ட மர்ம நபர் பணப்பையை திருடி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள், இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முதாட்டியிடம் நகை திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story