தனியார் பஸ்சில் பயணம் செய்தபெண்ணிடம் 21 பவுன் நகை அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


தனியார் பஸ்சில் பயணம் செய்தபெண்ணிடம் 21 பவுன் நகை அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 6:46 PM GMT)

தனியார் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 21 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்



21 பவுன் நகை அபேஸ்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் மனைவி கலைவாணி (வயது 60). இவர் தன்னுடைய பேரக்குழந்தைகளை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள உறவினர் வீட்டில் விடுமுறைக்கு விடுவதற்காக அழைத்து வந்தார்.

அங்கு உறவினர் வீட்டில் பேரக்குழந்தைகளை விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரத்திற்கு தனியார் பஸ் ஒன்றில் கலைவாணி பயணம் செய்தார். பஸ்சில் கூட்டநெரிசலில் நகை திருட்டுப்போகும் என்று அறிந்து கலைவாணி, தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பத்திரமாக ஒரு பைக்குள் வைத்தார்.

போலீஸ் விசாரணை

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்ததும், பஸ்சில் இருந்து கலைவாணி கீழே இறங்கி தான் வைத்திருந்த பையை பார்த்தார். அப்போது அந்த பையில் இருந்த 21 பவுன் நகை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சில் தேடியும் நகை கிடைக்கவில்லை. பஸ்சில் கூட்டநெரிசலில் யாரோ மர்ம நபர், கலைவாணி வைத்திருந்த பையில் இருந்த நகையை நைசாக அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சமாகும். இதுகுறித்து கலைவாணி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு நகையை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story