"5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் - 100% தள்ளுபடி" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுந்த பயனாளர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கட்டமாக நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதன்படி 14 லட்சத்து 40,000 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story