முன்னாள் ராணுவ வீரரிடம் நகை திருட்டு


முன்னாள் ராணுவ வீரரிடம் நகை திருட்டு
x

முன்னாள் ராணுவ வீரரிடம் நகை திருட்டு

கோயம்புத்தூர்

கோவை

கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 76), முன்னாள் ராணுவ வீரர். இவர் தனியார் பஸ்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் ஆஸ்பத்திரி முன்பு உள்ள பஸ்நிறுத்தத்தில் இறங்கிய அவர், தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அது திறந்து கிடந்தது. அத்துடன் அதில் இருந்த 4 பவுன் நகையை காணவில்லை.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அந்த பஸ்சில் இருந்து அந்தப்பகுதியில் இறங்கியவர்கள் யார்? என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story