புதிய தொழில்நுட்ப உதவியுடன் ஏரி பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி


புதிய தொழில்நுட்ப உதவியுடன்  ஏரி பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி
x

புதிய தொழில்நுட்ப உதவியுடன் ஏரி பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி

நாமக்கல்

சேந்தமங்கலம்:

மோகனூரில் இருந்து ராசிபுரம் வரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து முத்துகாப்பட்டி, அக்கியம்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மெயின் ரோடு, விவசாய பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் ஏரியில் தண்ணீர் செல்வதால் அங்கு பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் ஏரிக்கரையின் அருகில் கரையை பலப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து புளூப் ப்ராசஸ் என்னும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் பணிகள் நடந்து வருகிறது. அதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.


Next Story