பணி இடமாற்றம் தொடர்பான வழக்கு - சலுகைகளுக்கு உரிமை கோர முடியாது என ஐகோர்ட் தீர்ப்பு


பணி இடமாற்றம் தொடர்பான வழக்கு - சலுகைகளுக்கு உரிமை கோர முடியாது என ஐகோர்ட் தீர்ப்பு
x

நிர்வாக வசதிக்காக கலந்தாய்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

சென்னை,

திருவள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணி இடமாற்றம் தொடர்பாக சிறப்பு கலந்தாய்வுக்கு முன்கூட்டியியே தன்னை அழைக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், பணி இடமாற்றம் மற்றும் பணி நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தெரிவித்தார். நிர்வாக வசதிக்காக கலந்தாய்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இந்த சலுகைகளை உரிமை கோர முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.


Next Story