தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன். கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணியாற்றி வருகிறார்.
மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story