வட்டார அளவிலான கபடி போட்டி


வட்டார அளவிலான கபடி போட்டி
x

வட்டார அளவிலான கபடி போட்டி நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்14, 17, 19 வயதிற்குட்பட்ட வட்டார அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 26 அணிகளும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 16 அணிகளும், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 12 அணிகள் என 26 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இப்போட்டியி்ல் 14 வயது பிரிவில் குன்றக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும் பிடித்தது. 17 வயது பிரிவில் குன்றக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், 19 வயது பிரிவில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும் பிடித்தது.

வெற்றி பெற்ற அணிகள் திருப்புவனத்தில் நடைபெற உள்ள சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜோசப்நாதன், சரவணன், சிவக்குமார், இளஞ்சூரியன், விண்ணரசி மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.



Next Story