அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா- பங்கேற்க வந்தவர்கள் திடீர் சாலை மறியல்.! தூத்துக்குடியில் பரபரப்பு
மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்த வந்தனர்.
அப்போது, மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விளக்கின் நுழைவு வாயிலில் சிலர் மேலே ஏறி சமுதாய கொடியை ஏற்றியுள்ளனர். அப்போது அங்கே பணியில் இருந்த போலீசார், அவர்களை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார், ஒலிப்பொருக்கியின் மூலம் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால், அவர்கள் சாலையை விட்டு கலைந்து செல்லாததால், போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க அங்கு டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் 300 மேற்பட்ட அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.