கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை


கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
x

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சி பகுதியை சேர்ந்த 50 சதவீத ஏழை, எளிய பெண்களுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்குட்பட்ட உரிமைத்தொகையை பெற்று தருவதற்கான முழு நடவடிக்கையும் ஊராட்சி பணியாளர்களை கொண்டு எடுத்து வருவதாக கூறினார். இதில், சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story