கக்கன் பிறந்த நாள் விழா


கக்கன் பிறந்த நாள் விழா
x

கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

மதுரை

மேலூர்,

மேலூர் வட்டம் தும்பைப்பட்டி முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த கிராமம் ஆகும். இங்குள்ள கக்கன் மணிமண்டபத்தில் கக்கன் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மேலூர் தாசில்தார் செந்தாமரை, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜராஜன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர்கள் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் கக்கன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் நகர் துணைச்செயலாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story