காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம்


காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம்
x

காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

ஆய்வு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், குடும்பத்தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, விண்ணப்ப பதிவு முகாம்கள் அமைக்க ரேஷன் கடைகளுக்கு அருகாமையிலேயே இருக்கும், தகுதிவாய்ந்த அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தல், முகாம்களுக்கு வருகிற பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் சேகரித்தல் தொடர்பாக அறிவுரைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

பயிற்சி

மேலும் இந்த திட்டம் குறித்து மாவட்ட அளவிளான முதன்மை பயிற்சியாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஆணையர் மாநகராட்சி, காஞ்சீபுரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), வருவாய் கோட்ட அலுவலர்கள் காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் முன்னோடி வங்கி மேலாளர், தாசில்தார்கள், மாவட்ட மின் மேலாளர் மற்றும் அனைத்து இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story