பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது


பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது
x

மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஸ்ரீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story