காளியம்மன் கோவில் திருவிழா


காளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 10 Jun 2023 12:45 AM IST (Updated: 10 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி புல்லாவெளியில் காளியம்மன் கோவிலின் 68-வது ஆண்டு திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு புல்லாவெளி குடகனாற்றிலிருந்து அம்மன் கரகம் அலங்கரித்து கரகாட்டம், வாண வேடிக்கையுடன், மேளதாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 2-வது நாள் விழாவில் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும் பக்தர்கள் 20 அடி நீளம் அலகு குத்தியும், உடம்பில் பட்டா கத்திகளை குத்திக்கொண்டு ஒரே கிரேன் மூலம் 6 பேர் பறவைகாவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-வது நாளான நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை பெண்கள் முளைப்பாரி எடுக்க அம்மன் பல்வேறு வேஷங்களுடன் மஞ்சள் நீராடி, வாண வேடிக்கையுடன் புல்லாவெளி மீனாட்சி ஊத்து மெயின் ரோடு வழியாக வீதி உலா வந்தது. வழிநெடுகிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 9 மணிக்கு அம்மன் பூஞ்சோலை வந்தடைந்தது. மேலும் 2 நாட்கள் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் மணலூர் மலைக்கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

1 More update

Next Story