புதுப்பேட்டை அருகே காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


புதுப்பேட்டை அருகே காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

புதுப்பேட்டை அருகே காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே காமாட்சிப்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவில் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடினர். தொடர்ந்து கோவிலில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த கரகம் ஜோடிக்க பயன்படுத்தப்படும் பித்தளை செம்பையும் திருடிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இ்டத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story