காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை
சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் 69-வது ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) காப்புகட்டுதல், கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. வருகிற 14-ந் தேதி காலை அம்மனுக்கு பாலாபிஷேக நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் பிள்ளைவயல் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இரவு பூச்சொரிதல் விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் நாராயணி கோவில் பூசாரி சங்கு மணிகண்டன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story