கல்லடை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கல்லடை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கல்லடை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கல்லடையில் விநாயகர், மகா மாரியம்மன், பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து விநாயகர், மகா மாரியம்மன், பெருமாள் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய காவிரி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க வாண வேடிக்கைகளுடன் பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு மகா மாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், அர்ச்சனைகள் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதனைநடைபெற்றது. அதனை தொடர்ந்து காப்புக்கட்டுதல், மங்கள இசை, கோபூஜை, யாத்ராதானம், கடம்புறப்பாடுகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர், மகா மாரியம்மன், பெருமாள் கோவில்களுக்கு கடம்பன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கருடா ஆழ்வார் கோவிலை சுற்றிவர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் செய்யப்பட்ட பின், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர் அமைப்பினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story