கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது


கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது
x

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கலவரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்தின்போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 பேர், போலீசார் வாகனத்தின் மீது கற்களை வீசியதாக 2 பேர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story