மாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மையை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் - அமைச்சர் சக்கரபாணி


மாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மையை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் - அமைச்சர் சக்கரபாணி
x

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக உண்மையான குற்றத்தை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழகத்தில் நடப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி. இதில், உண்மையான குற்றத்தை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர். கழக அரசானது மக்களின் குறிப்பாக மாணவர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டுள்ளது. மாணவர்களின் உரிமையை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் இந்த அரசானது செல்லும்.

எனவே, உறுதியாக விரைவில் நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைத்து, யாரும் வதந்திகளையும், புரளிகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story