மாமல்லபுரம் கோவில் அருகே கரை ஒதுங்கிய கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் ரேடார் கருவி
ரேடார் கருவியின் இணைப்பு சங்கிலி கடல் சீற்றம் காரணமாக துண்டிக்கப்பட்டு கடலில் அடித்துச் செல்லப்பட்டது.
செங்கல்பட்டு,
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய கடற்கரையை கடக்கும் படகுகள், கப்பல்கள் மற்றும் இயற்கை சீற்றங்களை கண்காணிப்பதற்காக 'போயா' என்ற ரேடார் கருவி நிறுவப்பட்டிருந்தது. இந்த ரேடார் கருவியின் இணைப்பு சங்கிலி கடல் சீற்றம் காரணமாக துண்டிக்கப்பட்டு கடலில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் 'போயா' ரேடார் கருவி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கோவில் அருகே தனியார் விடுதியின் பின்புறம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ரேடார் கருவியை மீட்டு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story