கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்


கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல்மிக்க, ஒரு பெண்ணுக்கு அவரது துறையை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த 2022-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் அல்லாமல் நேரடியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு வரும் 26-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இந்த விருது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 7401703509 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story