அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி,
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள் விழா
பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சித்ராதேவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காமராஜர் பிறந்த நாளையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொப்பம்பட்டி
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் காமராஜர் குறித்து பேசினார். பின்னர் காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் தேவி, மகாலட்சுமி, மனுவேல்ராஜன், உஷா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மனோரஞ்சிதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அர்த்தநாரிபாளையம்
பொள்ளாச்சி நகராட்சி 15-வது வார்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தர்ராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக ஆசிரியை செல்லம்மாள் வரவேற்று பேசினார். விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் நாகரத்தினம், சத்தியபிரியா, கருணாசேகரன் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.