கணவாய் கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்
சாணார்பட்டி அருகே கணவாய் கருப்புசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி கணவாய் கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, வேதபாராயணம், நாடிசந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
இதனையடுத்து நேற்று காலை 10 மணிக்கு கோபுர கலசத்தில் மேட்டுக்கடை திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் கருப்புசாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.ஆண்டிஅம்பலம், மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ராமராஜ், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் தர்மராஜன் மற்றும் கணவாய்பட்டி, நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.