காஞ்சனகிரி மலைக்கோவில் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க வேண்டும்

காஞ்சனகிரி மலைக்கோவில் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க வேண்டும்
x

காஞ்சனகிரி மலைக்கோவில் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறி சிவபுராணம், திருவாசகம் பாடியவாறு கலெக்டர் அலுவலத்தில் நூதன முறையில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை

ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி, முகுந்தராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைக்கோவிலை நிர்வாகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை நிலை வருகிறது.

இந்நிலையில் காஞ்சனகிரி மலைக் கோவிலை பொதுமக்கள் கட்டுப்பாட்டில் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கூறி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

சிவபுராணம் பாடியவாறு

அவர்கள் மிகவும் பழமையான காஞ்சனகிரி சிவன் கோவில் தொடர்ந்து பொதுமக்களின் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என சிவபுராணம், திருவாசகம் பாடியவாறு சென்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். வேலூர் கோட்ட இந்து முன்னணி அமைப்பாளர் ராஜேஷ், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மோகன், எஸ்.ஆர்.டி.சரவணன், இந்து முன்னணி நிர்வாகிகள், சிவனடியார்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பக்தி பாடல்கள் பாடியவாறு நூதன முறையில் மனு அளிக்க இந்து முன்னணியினரும், சிவனடியார்களும், பொதுமக்களும் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று பரபரப்பு காணப்பட்டது.

Next Story