காஞ்சீபுரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூன்


காஞ்சீபுரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூன்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்கவிட்டார்.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்ததையொட்டி காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதால், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


1 More update

Next Story