ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரருக்கு காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டு
ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரரை காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாநகராட்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 75). தமிழ்நாடு காவல் துறையில் தலைமை காவலராக பணி புரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆதரவற்றவர்கள், அனாதைகள் மற்றும் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தோர் என பல பேரை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்து, ஈம சடங்கு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதுவரையில் சுமார் 4 ஆயிரம் பேரின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ள சீனிவாசன் சேவைகள் குறித்து அறிந்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி பொன்னி தனது அலுவலகத்திற்கு சீனிவாரனை நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து அவரது சேவையை பாராட்டி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
Related Tags :
Next Story