மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு


மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 வார்டுகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வாலாஜாபாத் மெக்லின்புரம் பகுதியில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில் திடீரென காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அந்தபகுதிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மழை வெள்ளம் தேங்காதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக கால்வாய்களை சுத்தம் செய்து வைக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின் போது பயிற்சி உதவி கலெக்டர் சங்கீதா, பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story