காஞ்சிபுரம்: பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், 5 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு பல்வேறு வகையான பழைய பிளாஸ்டிக் பயன்பாட்டுப் பொருட்கள் சேமிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் இன்று இந்த பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 5 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் வானில் கரும்புகை சூழ்ந்தது. இந்த தீயை முழுவதுமாக அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
Related Tags :
Next Story