காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு


காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
x

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம்

உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஏற்பாட்டின் பேரில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தங்கத்தேரில், காமாட்சி அம்மன் உற்சவர் வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பிறகு அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்தனர்.

பிறகு எடப்பாடி பழனிசாமி நீடுழி வாழ வேண்டியும், மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வரவேண்டி அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் வீ.வள்ளிநாயகம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன் உள்பட திரளானோர் கலந்துக்கொண்டு தங்கத்தேரை இழுத்து வழிபட்டனர்.

பிறகு கோவில் பிரசாதங்களை பெற்று கொண்ட வாலாஜாபாத் பா.கணேசன், கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரிடம் வழங்கி வாழ்த்துகளை பெற்றார்.


Next Story