முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்


முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
x

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

கந்தசஷ்டி விழா

வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழா எதுவும் நடைபெறவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விழா தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். முன்னதாக அதிகாலையில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சி

பின்னர் சுவாமி சன்னதியில் நடைபெற்ற சஷ்டி பாராயண வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சுப்பிரமணிய சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் சூரிய கிரகணம் காரணமாக கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இரவு 7 மணிக்கு பின் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதியன்று வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story