கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை


கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை
x

குற்ற வழக்கில் தொடர்புடைய 71 பேரை எச்சரித்து உறுதிமொழி பெறப்பட்டு கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

ராமநாதபுரம்


குற்ற வழக்கில் தொடர்புடைய 71 பேரை எச்சரித்து உறுதிமொழி பெறப்பட்டு கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

நடவடிக்கை

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக போலீஸ் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் மற்றும் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வெளியில் வந்த 71 நபர்கள் நேரில் வரவழைக்கப் பட்டனர்.

இவர்களிடம் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை கூறி எச்சரிக்கப்பட்டனர்.

பின்னர், மேற்படி குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 71 நபர்கள் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடாமல் இருக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பொது இடங்களிலோ, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ கஞ்சா விற்பனை செய்வதாக ஏதேனும் தகவல் இருக்கும் பட்சத்தில் அந்த தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யாராக இருந்தாலும் ஹலோ போலீஸ் பிரத்யேக எண் 8300031100-க்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

எச்சரிக்கை

தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும். மேற்படி தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரித்துள்ளார்.


Next Story