தொழிலாளர்களுக்கு 40 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம்


தொழிலாளர்களுக்கு 40 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம்
x

தொழிலாளர்களுக்கு 40 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் ஓ.எச்.டி. ஆபரேட்டராக பணிபுரியும் 12 தொழிலாளர்களுக்கு கடந்த 40 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக்கண்டித்து ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் கடந்த மே மாதம் தாசில்தார் முன்பாக நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் குறைந்தபட்சம் தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குவோம் என்ற வாக்குறுதியை மீறி கொடுக்க மறுத்து அடாவடியாக செயல்படும் ஆலவயல் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், சம்பளத்தை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்கோரி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில், 12 தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பு மணவாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story