கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா: அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு


கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா: அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

கூடலூர் அருகே தமிழக எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கொடியேற்றப்பட்டு திருவிழாவிற்காக முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே விழா நடத்துவது தொடா்பாக இரு மாநில அதிகாரிகள் இடையே ஆலோசனை கூட்டம் கடந்த 17-ந்தேதி தேக்கடியில் நடந்தது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அடிப்படை வசதிகள் குறித்து இருமாநில அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், தாசில்தார் சந்திரசேகா், கேரள மாநிலம் சார்பில் பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் பாட்டீல் சுயோக் சுபாஷ் ராவ், இடுக்கி மாவட்ட சப்-கலெக்டர் அருண், பீா்மேடு துணை போலீஸ் சூப்பிரண்டு குரியாகோஸ் ஆகியோர் கலந்து கொண்டனா். இதைத்தொடர்ந்து குடிநீா், மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் இடங்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா். மேலும் கோவில் வளாகம் மற்றும், மலைப்பாதை சீரமைப்பு பணிகளை பாா்வையிட்டு, கோவில் வளாகத்தில் ஆலோசனை நடத்தினா்.


Related Tags :
Next Story