கன்னியாகுமரி: மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி-காமராஜர் நினைவு மண்டபங்கள்


இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை யொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி,காமராஜர் நினைவு மண்டபங்கள் இரவில் மின்னொளியில் ஜொலிக்கின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தவண்ணம் உள்ளனர்.

கன்னியாகுமரி:

இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுஉள்ளது.

தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி, காமராஜர் மண்டபங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனால் இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் முன்னொழியில் விழும் காந்தி காமராஜர் மண்டபங்களை பார்வையிட்டு செல்வதோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

காந்தி நினைவு மண்டப வளாகத்தில் அமைந்து உள்ள மூவர்ண கொடியை தாங்கி நிற்கும் பாரத மாதா சிலையும் வர்ணங்கள் பூசப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கு வகையில் புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.


Next Story