காரைக்கால்: போலி நகை மோசடி - காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்..!
போலி நகை மோசடி வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் காரைக்காலில் தங்க முலாம் பூசிய செம்பு கம்பிகளால் ஆன போலி நகைகளை உருவாக்கி, வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் அடகு வைத்தும் விற்பனை செய்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவான பெண் தொழிலதிபர் புவனேஸ்வரியை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து காரைக்கால் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்தும், நகைக் கடைகளில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் கைதான காவல் உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து புதுச்சேரி காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story