கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்


கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 17 Feb 2024 8:27 PM IST (Updated: 17 Feb 2024 8:28 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடகா அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது. கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது.

மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம் அதுதான் நியதி" என்று திட்டவட்டமாக கூறினார்.


Next Story