கர்நாடக, மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு


கர்நாடக, மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 7 Oct 2023 1:06 AM IST (Updated: 7 Oct 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக, மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் டோல்கேட் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டுவது குறித்து கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடிக்கும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசையும், காவிரி நீர் பெற்றுத்தராத மத்திய அரசையும் கண்டித்து வருகிற 12-ந்தேதி கொள்ளிடம் உத்தமர் கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். மேலும் குறுவை பாதிப்புக்கு ஒரு ஏக்கருக்கு தமிழக அரசு ரூ.13 ஆயிரத்து 500 அறிவித்திருப்பது போதுமானதாக இல்லை. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய அமைப்பாளர் சதாசிவம் நன்றி கூறினார்.


Next Story