சுங்க கட்டண உயர்வால் மக்களுக்கு பாதிப்பு- கார்த்தி சிதம்பரம்
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும்..இவ்வாறு அவர் கூறினார்.
பழனி,
பழனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது:
அ.தி.மு.க. வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனை தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக வெளிப்படையான முதல்-அமைச்சராக செயல்படுகிறார். இதனால் மக்களிடம் அவருக்கு நாள் தோறும் மதிப்பு அதிகரித்து வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு சரியான முறையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தற்போது சுங்க கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும்..இவ்வாறு அவர் கூறினார்.