கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கம்


கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கம்
x

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது.

இதனை காண திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை சென்னை, புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சிறப்பு ரெயில் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.40 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக வந்து பகல் 12.15 மணி அளவில் திருவண்ணாமலையை வந்தடைகின்றது.

பின்னர் அந்த ரெயில் பிற்பகல் 1.45 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக அன்று மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தை சென்று அடைகின்றது. இதேபோல் இந்த சிறப்பு ரெயில் இதே வழிதடத்தில் 7-ந்தேதியும் (புதன்கிழமை) இயக்கப்பட உள்ளது என்று ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story