நெருங்கும் கார்த்திகை மகா தீபம்... திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்


நெருங்கும் கார்த்திகை மகா தீபம்... திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்
x

விழாவின் 8-ம் நாளான இன்று, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வெட்டும் குதிரையில் வீதி உலா வந்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வெட்டும் குதிரையில் வீதி உலா வந்தனர்.

முன்னதாக, விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திருவண்ணாமலையில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். கார்த்திகை மகா தீபம் நெருங்கும் நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது.


Next Story