கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x
திருப்பூர்


புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 5 ஆயிரம் பக்தர்களுக்கு கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருடஈஸ்வர பெருமாள் கோவில்

திருப்பூர் காங்கேயம் ரோடு விஜயாபுரம் ஒத்தக்கடையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கருடஈஸ்வர பெருமாள் கோவில் உள்ளது. அங்கு ஒரே சிலையில் சிவனும், பெருமாளும் அவதாரம் அளிக்கும் நிலையில், வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் சக்தி நிறைந்த தெய்வமாகவும் விளங்கி வருகிறது. அந்த வகையில் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் வந்து வேண்டியது நிறைவேறிய உடன் திரும்பக் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 3 சனிக்கிழமைகளில் பூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் அபிஷேக பூஜையும், 6 மணிக்கு அலங்கார பூஜை மற்றும் தீபாராதகருடஈஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

அன்னதானம்

இதை தொடர்ந்து 7 மணிக்கு கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் கொங்கு வி.கே.முருகேசன் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக கோவில் அருகே பிரத்யேக அன்னதான பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் வெஜிடபிள் பிரியாணி, எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள், ஏழை, எளியவர்கள் என 5 ஆயிரம் பேர் நீண்ட வரிசையில் நின்று பசியாற சாப்பிட்டு சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய அன்னதானம் 11 மணிக்கு நிறைவடைந்தது. இதில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story