கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது -தி.மு.க. நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது -தி.மு.க. நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தி.மு.க. நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளரும், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் பெரம்பலூர் நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story